'துணிவு' வெளியானது : அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்; திண்டுக்கல்லில் அதிர்ச்சி..

thunivu

* அஜித்குமார் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கியுள்ள புதிய படம் துணிவு.

படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொகேன், நயனா சாய், ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திர கனி, பகவதி பெருமாள் அஜய், வீரா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் உலகம் முழுவதும் 'துணிவு' படம் இன்று வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் முதல்காட்சியாக நள்ளிரவு 1 மணிக்கு தியேட்டர்களில் துணிவு திரைப்படம் வெளியாகியுள்ளது. துணிவு திரைப்படம் தியேட்டர்களில் வெளியான நிலையில் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

* சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தியேட்டரில் துணிவு திரைப்படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் துணிவு திரைப்படத்தின் முதல்காட்சியான நள்ளிரவு 1 மணி காட்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து ரசிகர்களின் தொடர் கூச்சலை அடுத்து 1 மணிநேரம் தாமதமாக, நள்ளிரவு 2 மணிக்கு 'துணிவு' தியேட்டரில் திரையிடப்பட்டது.

 

Share this story