ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு
Fri, 5 Aug 2022

தமிழகத்தில், 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஜவஹர், கார்த்திக், மணிவாசன், மங்கத்ராம் சர்மா, ஆனந்த், மதுமதி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலாளராக ஜவஹர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், பொதுப்பணித்துறையின் முதன்மை செயலாராக மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கால்நடைத்துறை முதன்மை செயலாளராக கார்த்திக் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிறுதொழில் வளர்ச்சிக்கழகத்தின் மேலாண் இயக்குநராக மதுமதி நியமிக்கப்பட்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளராக மங்கத் ராம் சர்மா, ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநராக ஆனந்த் ஆகியோரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
*