சென்னையில் தடுப்பூசி முகாம் : சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..
Updated: Aug 5, 2022, 16:37 IST
By

தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் விதமாக சென்னையில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் 7-ந்தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இந்நிலையில், பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்திவுள்ளது.
*