குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி : சுகாதாரத்துறை ஏற்பாடு..

By 
child

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தடுப்பூசி போடும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. 

முதலில், முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. 

அதன்பிறகு, பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டினர்.

இதற்காக, சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி முழு அளவில் மேற்கொள்ளப்பட்டது. 

இதேபோல், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை இந்தியா தீவிரப்படுத்தி வருகிறது.

இதற்கிடையே, கடந்த மாதம் 16-ம் தேதி முதல் 12 முதல் 14 வயதிலான சிறுவர்-சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 12 முதல் 14 வயதுடைய 60 சதவீத சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது' என சுகாதாரத்துறை அமைச்சர்
மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
*

Share this story