குரூப்-2 தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும்? : டிஎன்பிஎஸ்சி தகவல்

tnpsc4

தமிழகத்தில் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு கடந்த மே 21ம் தேதி நடைபெற்றது. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உள்ளிட்ட 116 நேர்முகத் தேர்வு கொண்ட காலி பணியிடங்களுக்கும், நகராட்சி கமிஷனர், தலைமை செயலக உதவி பிரிவு அலுவலர் உள்பட 5,413 நேர்முகத் தேர்வு இல்லாத காலி பணியிடங்களுக்கும் தேர்வு நடந்தது.

குரூப்-2 தேர்வை தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 96 ஆயிரத்து 247 பேர் ஆண்கள், 6 லட்சத்து 81 ஆயிரத்து 880 பேர் பெண்கள். 48 பேர் மூன்றாம் பாலினத்தவர் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 14 ஆயிரத்து 531 மாற்றுத்திறனாளிகளும் தேர்வு எழுதினார்கள்.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் 15% தேர்வர்கள் ஆப்சென்ட் என தெரியவந்துள்ளது. அதாவது, 9.94 லட்சம் பேர் தேர்வெழுதிய நிலையில், 1.83 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவித்தனர்.

குரூப் 2 தேர்வு முடிந்து 5 மாதங்கள் இருந்த நிலையில், முடிவுகள் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் கூறுகையில், " குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெண்கள் இட ஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவதற்கான பணிகள் முடிவடைந்ததும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்" என்றார்.

Share this story