தமிழகத்தில் மிதமழை, கனமழை பொழியும் மாவட்டங்கள் எவை? : வானிலை மையம் தகவல்
 

By 
rain6

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டத்தில், மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லையிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வட தமிழகம் தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

இதேபோன்று தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 

நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
*

Share this story