எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..

medical1

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2022-23-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ (பி.டி.எஸ்.) படிப்புக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேர்வதற்கான இணையதள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதன்படி இணையதள விண்ணப்ப பதிவு 22-ந் தேதி (நாளை) முதல் தொடங்குகிறது. விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாள் அக்டோபர் 3-ந் தேதி ஆகும். இது தொடர்பான இணைதள முகவரிகள் www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share this story