திருமணமான மறுநாளே புதுப்பெண் உயிரிழப்பு.. நடந்தது என்ன?

By 
marriage8

சேலம் மாவட்டம், இடைப்பாடி வெள்ளாண்டிவலசை சேர்ந்தவர் செந்தில்குமார்(33). பேக்கரி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் இடைப்பாடி அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருநாவுக்கரசு மகள் சுதா (27)என்பவருக்கும் கடந்த 16ம் தேதி முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில், திருமணமான மறுநாளே சுதாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சுதாவுக்கு ஏற்கனவே மூச்சுத் திணறல் இருந்ததும், 4 ஆண்டாக மருத்துவம் பார்த்து வந்ததும் தெரிந்தது. திருமணமான ஒரே நாளில் மணப்பெண் உயிரிழந்ததால் ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Share this story