காதலனை நம்பி சென்ற பள்ளி மாணவி.! வீட்டில் அடைத்து வைத்து நண்பருடன் செய்த காரியம்.! விசாரணையில் பகீர் தகவல்..

By 
girl4

திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து காதலன் நண்பருடன் சேர்ந்து பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து வேறு வழியில்லாமல் எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில், காணாமல் போன மாணவி சென்னை கொருக்குபேட்டையில் உள்ள வீடு ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்த போலீசார், அங்கு விரைந்து  சென்று பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து அந்த மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ராஜபாண்டி (27) என்பவர் கடத்தி சென்று வீட்டில் அடைத்து வைத்துள்ளார். அவருடைய நண்பர் ரமேஷ் மற்றும்  ராஜபாண்டி இருவரும் சேர்ந்து கொடூரமான முறையில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து, இருவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கைதான ரமேஷ் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர். அவர் ஊர்க்காவல் படையில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால், வெளியில் தான் போலீஸ்காரர் என்று கூறி வந்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

Share this story