சென்னையில் விபத்து : 24 வீடுகள் இடிந்து தரைமட்டம்..

Accident in Chennai 24 houses collapsed to the ground ..

சென்னை, திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குப்பத்தில், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்ட‌டம் இன்று காலை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்தினால், 24 வீடுகள் தரைமட்டமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலையில் கட்டடத்தில் அதிர்வு இருந்ததால், மக்கள் வெளியேறிய நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

ஏற்கனவே, விரிசல் ஏற்பட்டிருந்த டி பிளாக்கில் இருந்து  மக்கள் அவசர அவசரமாக வெளியேறியதால், உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது. 

தற்போது, கட்டிட இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என்பது குறித்து  தீயணைப்பு படை வீரர்கள் தேடி வருகிறார்கள். 

மேலும், இடிபாடுகளை அகற்றும் பணியிலும் தீயணைப்புத்துறை வீர‌ர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 
*

Share this story