முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட நடிகர்கள் ரஜினி, விஜய் டுவிட்டர் 'புளு டிக்' மார்க் நீக்கம்..

twit6

மாத சந்தா தொகை செலுத்தி ட்விட்டர் ப்ளூ கணக்கு வாங்காத அனைவரின் டுவிட்டர் கணக்குகளில் இருந்தும் ப்ளூ டிக் மார்க் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சிலம்பரசன், கிரிக்கெட் வீரர் கோலி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல பிரபலங்களின் அதிகாரப்பூர்வ டிக் மார்க் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சச்சின் டெண்டுல்கரின் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர், ப்ளூ டிக் மார்க் எடுத்துவிட்டால் இது சச்சினின் நிஜ கணக்குதான் என்று நாங்கள் எப்படி தெரிந்துக் கொள்வது என கேட்டிருந்தார்.

இந்நிலையில், டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சச்சின் டெண்டுல்கர் ரியாக் செய்துள்ளார். சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் ப்ளூ டிக் சரிபார்க்கப்பட்ட சின்னத்தை தனது சைகையால் காட்டிய புகைப்படத்தை வெளியிட்டு, இப்போதைக்கு இதுதான் என்னுடைய ப்ளூ டிக் சரிபார்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த டுவீட் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

Share this story