முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு வசதிகள்; முழு விவரம்..

By 
safe1

முதலமைச்சர் ஸ்டாலின் பாதுகாப்புக்காக கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

குடியரசு தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள் உள்ளிட்டோரின் பயணத்தின் போது அவர்களுடன் கான்வாய் என்று கூறப்படும் பாதுகாப்பு வாகனங்கள் செல்வது வழக்கம். அதே போல் முதலமைச்சர்களுக்கு கோர்சேல் என்ற தனிப்பிரிவு போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இந்த தனிக்குழுவில் ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர் என மொத்தம் 6 பேர் இடம்பெற்றிருப்பார்கள்.

முதலமைச்சர்களின் கான்வாயில் இவர்கள் தான் பாதுகாப்புக்கு செல்வார்கள். முதல்வரின் இல்லம், அலுவலகம், மேலும் அவர் வெளியே செல்லும் அனைத்து இடங்களுக்கும் இவர்கள் பாதுகாப்புக்கு செல்வார்கள். முதல்வர் செல்லும் போதும், அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு குறித்தும் இவர்கள் தான் கண்காணிப்பார்கள்.

இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் பாதுகாப்புக்காக கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் வாகனங்கள் ஏற்கனவே வெள்ளை நிறத்தில் இருந்த நிலையில் தற்போது 6 கருப்பு நிற கார்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த புதிய வாகனங்களில் முதலமைச்சர் ஸ்டாலினின் பாதுகாப்புக்காக கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த கார்களில் 3 கண்காணிப்பு கேமரக்கள் உள்ளன. காரின் மேல் பகுதியில் இருந்து அனைத்து நிகழ்வுகளையும் படமாக்கும் வகையில் இந்த கேமரா பொருத்தப்படுட்ள்ளது. மேலும் முதலமைச்சர் வெளியே செல்லும் போது, பாதுகாப்பு வீரர்கள் வெளியில் இருந்தவாறே கார்களில் நிற்கும் வகையில் இந்த காரக்ள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மற்ற வாகனங்களில் இருந்து தனித்து செல்வதற்காக இந்த கார்கள் மாற்றப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய கார்களின் புத்தாண்டு தினமான இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்து தனது தயார் தயாளு அம்மாளிடம் புத்தாண்டு வாழ்த்து பெற கோபாலபுரம் சென்றார். அப்போது புதிய இந்த கார்களின் கான்வாய் மூலம் அவர் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story