ஹெலிகாப்டர் விபத்து நடந்த கிராமம் 'தத்தெடுப்பு' ; மேலும் பலத்த இராணுவ பாதுகாப்பு..

By 
'Adoption' of the village where the helicopter crash took place; More heavy military security.

குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில், கடந்த 8-ந் தேதி ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 

இந்த விபத்து குறித்து, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஏர் மார்ஷல் மானவேந்திர சிங் 4 நாட்கள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். 

ஆய்வு :

தொடர்ந்து விபத்தில் மீட்கப்பட்ட தடயங்கள் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

ஹெலிகாப்டர் விபத்தில் தடயங்கள் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. 

ஹெலிகாப்டர் வால், முன்பகுதி, இறக்கை போன்ற பாகங்கள் அங்கிருந்து கயிறு மூலம் எடுத்து ஒரு பகுதியில் வைக்கப்பட்டு உள்ளது. 

அந்த பாகங்கள் இருந்த பகுதியில் தடயங்கள் உள்ளதா என்று விமானப்படையினர் ஆய்வு செய்து சேகரித்து வருகின்றனர்.

தத்தெடுப்பு :

மேலும் விபத்து நடந்த பகுதிக்கு வெளியாட்கள் செல்வதை தடுக்க ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மேலும், ஹெலிகாப்டர் விபத்தின்போது மீட்புப் பணிகளுக்கு உதவிய நஞ்சப்ப சத்திர கிராம மக்களின் சேவை, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. இதைதொடர்ந்து ராணுவம் அந்த கிராமத்தை தத்தெடுத்துள்ளது. 

மேலும், தமிழக அரசு மூலம் அத்தியாவசிய வசதிகளையும் செய்து கொடுக்க நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
*

Share this story