10 ஆண்டுகளுக்குப் பின், காங்கிரஸ் புதிய எழுச்சி..! உருவானது எப்படி?

By 
10ye

2009-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை வகித்தபோது 206 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பிறகு பெறும் சரிவைச் சந்தித்த காங்கிரஸ் 2014ல் வெறும் 44 இடங்களிலும், 2019 தேர்தலில் 52 இடங்களிலும் வெற்றி பெற்றது. இப்போது 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளில் வெற்றியை நெருங்குகிறது.

பிற்பகல் 2.30 மணியளவில் காங்கிரஸ் 97 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) 290 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

2014ல் காங்கிரஸ் ராகுல் காந்தியின் தலைமையில் 'மோடி அலை'யை எதிர்கொண்டு, கிட்டத்தட்ட 9.3 சதவீத வாக்குகள் குறைந்து 162 இடங்களை இழந்து, இழந்தது. 2014 பொதுத்தேர்தலில் இந்தி பேசும் மாநிலங்களான, குஜராத், ராஜஸ்தான், பீகார், ஜார்கண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை பின்னடவைக் கொடுத்தன.

மொத்தமுள்ள 543 இடங்களில் 336 இடங்களை வென்று பாஜக கூட்டணி கைப்பற்றியது. பாஜக தனித்து 282 இடங்களில் வெற்றி பெற்றது. உ.பி.யில் 73 இடங்களிலும், மகாராஷ்டிராவில் 41 இடங்களிலும், பீகாரில் 31 இடங்களிலும், மத்தியப் பிரதேசத்தில் 27 இடங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. குஜராத்தில் 26, ராஜஸ்தானில் 25, டெல்லியில் 7, இமாச்சலப் பிரதேசத்தில் 4, மற்றும் உத்தரகண்டில் 5 இடங்களை கைப்பற்றியது. ஜார்க்கண்டில் 14ல் 12 இடங்களையும், சத்தீஸ்கரில் 11ல் 10 இடங்களையும், ஹரியானாவில் 10 ல் 7 இடங்களையும் வென்றது.

தங்கள் பாரம்பரிய கோட்டையான அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. மற்ற இந்தி பேசும் மாநிலங்களில் 6 இடங்களை மட்டுமே காங்கிரஸ் பெற்றது. காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மேலும் 6 இடங்களைப் பெற்றன.

ஐந்தாண்டுகளில் பாஜக மேலும் முன்னேறி, தனித்து 303 இடங்களையும், கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து 353 இடங்களையும் கைப்பற்றியது. பாஜக உ.பி.யில் 74, பீகாரில் 39 மற்றும் மத்தியப் பிரதேசத்தில் 28 இடங்களைப் பெற்றது. குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களிலும் 77 இடங்களை வென்றது.

சத்தீஸ்கரில் 9 இடங்களையும் ஜார்கண்டில் 11 இடங்களையும் சேர்த்து பாஜக இந்தி பேசும் மாநிலங்களில் 238 இடங்களைக் கைப்பற்றியது.

இம்முறையும் ராகுல் காந்தியின் தலைமையில் போட்டியிட்ட காங்கிரஸ், மீண்டும் மோசமான சரிவை சந்தித்தது. இந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரஸ் 6 இடங்களையும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுடன் இணைந்து 7 இடங்களையும் கைப்பற்றியது. உ.பி.யின் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்; அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் ஸ்மிருதி இரானி வென்றார்.

தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதற்கு கட்சியில் எதிர்ப்பு இருந்தபோதும் தனது முடிவை மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.

கருத்துக்கணிப்புகள்

2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா மற்றும் இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் இரண்டும் எடுத்த கருத்துக்கணிப்புகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 401 இடங்களைக் குவிக்கும் என்று கூறின. நியூஸ்24 - டுடேஸ் சாணக்கியா பாஜக கூட்டணி 400 இடங்களை எட்டும் என்று கூறியது. மூன்று வெவ்வேறு கருத்துக்கணிப்புகள் பாஜக கூட்டணி 383, 392 மற்றும் 378 இடங்களை வெல்லும் என்று கணித்தன. பாஜக கூட்டணி 281க்கு கீழே போகாது என கருத்துக்கணிப்புகள் கூறின.

இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி இருவரும் தங்கள் கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறும் என்று சொன்னார்கள். வாக்கு எண்ணிக்கை நிலவரம் பல தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் கடும் போட்டி இருப்பதைக் காட்டுகிறது.

19 தொகுதிகளில் பாஜக கூட்டணி குறைந்த வித்தியாசத்தில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதேபோல, இந்தியா கூட்டணியும் 15 தொகுதிகளில் குறைந்த வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. வாக்குப்பதிவு முடியும்போது இந்தத் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு எந்தப் பக்கமாகவும் மாற வாய்ப்பு உள்ளது.

Share this story