கல்யாண நாளை கொண்டாடி விட்டு.. நள்ளிரவில் தூக்கில் தொங்கிய கர்ப்பிணி; கதறி அழுத கணவர் - நடந்தது என்ன?

By 
bava1

திருமண நாளை கொண்டாடிய 6 மாத கர்ப்பிணி நள்ளிரவில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழமாதேவி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் பவானி என்ற பெண்ணை பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களின் காதலுக்கு இருவீட்டார் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் வேறு வழியில்லாமல் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். 

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இரு குடும்பத்தினரும் இருவரையும் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையில் பவானி 6 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். கடந்த மாதம் பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்த பவானியை, கணவர் சக்திவேல் நேற்று வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார். அவர்களுக்கு திருமண நாள் என்பதால் வீட்டில் இருந்து அழைத்து வந்து இருவரும் தங்களது வீட்டில் திருமண நாளை கொண்டாடியதாக தெரிகிறது.

இந்நிலையில், திருமண நாள் கொண்டாட்டங்கள் முடிந்த நிலையில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சக்திவேல் வெளியே கிளம்பிய நிலையில் வீட்டில் தனியாக இருந்த பவானி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியே சென்ற கணவர் வீட்டில் வந்து பார்த்தபோது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அழுது கதறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பவானியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Share this story