ரூ.1.5 கோடி மதிப்பிலான சொத்தை அரசுக்கு எழுதி வைத்த முதியவர்; காரணம் என்ன தெரியுமா?

85

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரை சேர்ந்தவர் நாத் சிங் (85). இவருக்கு மனைவி, ஒரு மகன், நான்கு மகள்கள் உள்ளனர். நாத் சிங் மனைவி இறந்ததை அடுத்து தனியாக வசித்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு நாத் சிங் முதியோர் இல்லத்திற்கு சென்றார். நாத் சிங்குக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் வீடு மற்றும் நிலம் உள்ளது. நாத் சிங்கின் மகன் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மகள்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

இந்நிலையில், தனது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் தன்னைச் சந்திக்க வராததால் மனம் உடைந்த நாத் சிங், தனது நிலத்தை மாநில அரசுக்கு உயில் எழுதி வைத்துள்ளார். அவர் இறந்த பிறகு அங்கு ஒரு மருத்துவமனை அல்லது பள்ளியைக் கட்டும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

நாத் சிங் தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்துள்ளார். மேலும் மகன் மற்றும் நான்கு மகள்கள் தனது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
 

Share this story