துப்பாக்கிமுனையில், சிறுமி கற்பழிப்பு : பிரபல கிரிக்கெட் வீரர் மீது வழக்கு

At gunpoint, girl raped case against famous cricketer

பாகிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் யாசீர் ஷா. இவரது நண்பர் ஃபர்ஹான் துப்பாக்கி முனையில் மிரட்டி, 14 வயது சிறுமியை கற்பழித்துள்ளார். 

மேலும், படம் எடுத்து அந்த சிறுமியை மிரட்டியுள்ளார்.

வழக்குப் பதிவு :

பாதிப்புக்குள்ளான சிறுமியிடம், இந்த சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. 

அதையும் மீறி தெரிவித்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என யாசீர் ஷா மிரட்டியுள்ளார். 

இதுகுறித்து, இஸ்லாமாபாத்தில் உள்ள ஷலிமார் காவல் நிலையத்தில் அந்த சிறுமி புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், யாசீர் ஷா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர.

‘நான் மிகவும் செல்வாக்கு மிக்கவர் என்றும், தனக்கு உயர் பதவியில் இருக்கும் ஒருவரைத் தெரியும் என்றும் யாசீர் ஷா கூறினார். 

யாசிர் ஷா மற்றும் ஃபர்ஹான் வீடியோக்களை உருவாக்கி, வயது குறைந்த சிறுமிகளை பலாத்காரம் செய்கின்றனர்’ என புகாரில், அந்த சிறுமி பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

கிரிக்கெட் போர்டு :
 
இதுகுறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கூறுகையில், ‘இதுகுறித்த தகவல்களை திரட்டி வருகிறோம். உண்மை குறித்து முழுமையாக தகவல் கிடைத்த பின் கருத்து தெரிவிக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளது.

யாசீர் ஷா பாகிஸ்தான் அணிக்காக, 46 டெஸ்ட் போட்டியில் விளையாடி 235 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
*

Share this story