பயணிகளின் கவனத்திற்கு; நாகர்கோவில்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..

summer

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

* நாகர்கோவில் - தாம்பரம் இடையே (வ.எண்:06012) மாலை 4.35 மணிக்கு ஏப்ரல் 23,30-ந்தேதிகளில், மே மாதம் 7,14,21, 28-ந்தேதிகளில், ஜூன் மாதம் 4, 11, 18, 25-ந்தேதிகளில் மற்றும் ஜூலை மாதம் 2-ந்தேதி இயக்கப்படுகிறது.

* தாம்பரம் - நாகர்கோவில் இடையே (06011) காலை 8.15 மணிக்கு ஏப்ரல் 24-ந்தேதி, மே மாதம் 1,8,15,22,29-ந்தேதிகளில், ஜூன் மாதம் 12, 19, 26-ந்தேதிகளில் மற்றும் ஜூலை மாதம் 3-ந்தேதி இயக்கப்படுகிறது.

* திருவனந்தபுரம் - சென்னை எழும்பூர் இடையே (06044) இரவு 7.40 மணிக்கு மே மாதம் 3,10,17,24,31-ந்தேதிகளில், ஜூன் மாதம் 7,14,21, 28-ந்தேதிகளில் இயக்கப்படுகிறது.

* சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் இடையே (06043) மதியம் 2.25 மணிக்கு மே மாதம் 4,11,18,25-ந்தேதிகளில், ஜூன் மாதம் 8,15,22,29-ந்தேதிகளில் இயக்கப்படுகிறது.

* தாம்பரம் - நெல்லை இடையே (06031) இரவு 10.30 மணிக்கு ஏப்ரல் 26-ந்தேதி மற்றும் மே மாதம் 3,10,17,24-ந் தேதிகளில் இயக்கப்படுகிறது.

* நெல்லை - தாம்பரம் இடையே (06032) மதியம் 1.15 மணிக்கு ஏப்ரல் 27-ந்தேதி மற்றும் மே மாதம் 4,11,18,25-ந் தேதிகளில் இயக்கப்படுகிறது.

* தாம்பரம் - நாகர்கோவில் இடையே (06039) இரவு 7.30 மணிக்கு ஏப்ரல் 28-ந்தேதி மற்றும் மே மாதம் 5,12,19,26-ந்தேதிகளில் இயக்கப்படுகிறது.

* நாகர்கோவில் - தாம்பரம் இடையே (06040) மாலை 4.15 மணிக்கு ஏப்ரல் 22,28-ந்தேதிகளில் மற்றும் மே மாதம் 6,13,20,27-ந்தேதிகளில் இயக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Share this story