அரசு மருத்துவமனையில் மாணவிக்கு தாலி கட்டிய ஆட்டோ டிரைவர்; இளம்பெண் காவல் நிலையத்தில் தஞ்சம்..

By 
lmlm

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கமல்நாத். வேலூர் மாவட்டம் விருப்பாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யதர்ஷினி.

இவர் அப்பகுதியில் உள்ள டி. கே.எம். தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கமல் நாத்துக்கும், திவ்யதர்ஷினிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஏற்பட்டு மூன்று வருடங்களாக காதலித்து வருகின்றனர்.

இந்நிலையில், கமல்நாத்துக்கு கடந்த 12ஆம் தேதி வாகன விபத்து ஏற்பட்டு பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொலைபேசியில் திவ்யதர்ஷினி கமல்நாத் விபத்து ஏற்பட்டது குறித்து மனம் கவலையுற்று 25ம் தேதி வீட்டில் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காமல் பொள்ளாச்சி வந்த திவ்யதர்ஷினி அரசு மருத்துவமனையில் இருந்த கமல்நாத் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். 

மேலும், உடனே நாம் இருவரும் திருமணம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். திவ்யதர்ஷினி, கமல்நாத் காலில் அடிபட்டு இருந்த நிலையில் படுக்கையில் படுத்து இருந்த கமல்நாத் திவ்யதர்ஷினிக்கு தாலி கட்டினார். திவ்யதர்ஷினி அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று தங்கள் இருவருக்கும் பாதுகாப்பு வேண்டுமென காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். பெற்றோரை அழைத்த காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு இருவரையும் சேர்த்து வைத்தனர்.

கல்லூரி மாணவிக்கு ஆட்டோ டிரைவர் தாலி கட்டிய சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

 

Share this story