அத்துமீறிய நபரை புரட்டி எடுத்த மாடல் அழகி : பரபரப்பு சம்பவம்..

alma

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் நஷாலி அல்மா (24) பிட்னஸ் மாடலாகவும், சமூக ஊடகங்களில் உடற்பயிற்சி வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமானவர்.

நஷாலி அல்மா கடந்த ஜனவரி 22 அன்று, தம்பாவில் உள்ள இன்வுட் பார்க் அபார்ட்மென்ட் வளாகத்தில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது சேவியர் தாமஸ் ஜோன்ஸ் எனபவர் அவரை தாக்கி உள்ளார். நஷாலி அப்போது பதட்டப்படாமல் பயப்படாமல் தாக்குதல் நடத்தியவரிடமிருந்து தைரியமாக தன்னைத் தற்காத்துக் கொண்டார்.

இதனை தொடர்ந்து குற்றவாளி மற்றொரு பெண்ணை பலிவாங்க முயன்றபோது கைது செய்யப்பட்டார். நஷாலியை தரையில் ஜோன்ஸ் தவறானமுறையில் கட்டி அணைக்கிறார். ஆனால் நஷாலி தொடர்ந்து போராடுகிறார். சிறிது நேர சண்டைக்குப் பிறகு, அவரது துணிச்சலைக் கண்டு, தாக்கியவர் இறுதியாக ஓடிவிடுகிறார். இதுகுறித்த வீடியோவை ஹில்ஸ்பரோ கவுண்டி ஷெரிப் அலுவலகம் சமூக ஊடகங்களில் வெளியிட்டு உள்ளது.

நஷாலி அல்மா, இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில் கூறி இருப்பதாவது:-

அவன் என்னை நெருங்கி வந்தவுடனே, நான் அவனைத் தள்ளினேன். நான் அவனிடம் புரோ என்ன இப்படி செய்கிறாய்? என கேட்டேன் என்னிடமிருந்து விலகிச் செல்லுங்கள். என்னைத் தொட முயற்சிப்பதை நிறுத்துங்கள் என கூறினேன்.

எனது அறிவுரை என்னவென்றால், ஒருபோதும் தைரியத்தை கைவிடக்கூடாது, என் பெற்றோர்கள் எப்போதும் என்னிடம் இதை சொல்லிக்கொண்டு இருப்பார்கள், நான் அவருடன் சண்டையிடும்போது அதை நான் மனதில் வைத்திருந்தேன்" என்று நஷாலி கூறினார்.

Share this story