திரிபுராவில் பாஜக அரசு விழா : பிரதமர் மோடி பங்கேற்பு

tripura

சமீபத்தில் நடைபெற்ற திரிபுரா சட்டசபைத் தேர்தலில் 60 உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியில் பாஜக 32 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டி ஒரு இடத்தையும் பிடித்து ஆட்சியை கைப்பற்றியது.

தொடர்ந்து, முதல்வர் மாணிக் சாஹா தனது அரசின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சத்யதேவ் நரேன் ஆர்யாவிடம் நேற்று அளித்தார். புதிய அரசு மார்ச் 8ம் தேதி பதவியேற்பதாகவும், விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாகவும் ஆளுநர் ஏற்கனவே செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திரிபுராவில் வரும் மார்ச் 8 ம் தேதி நடைபெறும் பாஜக- ஐபிஎஃப்டி அரசு பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் மோடியின் திரிபுரா மாநில பயணம் தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் எஸ்.கே. சின்ஹா ஆலோசனை நடத்துகிறார். இதற்காக சிறப்பு பாதுகாப்பு குழு திரிபுரா வருகிறது என்றும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். திரிபுராவில் உள்ள விவேகானந்தர் மைதானத்தில் புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Share this story