நீதிமன்ற வளாகத்தில் கொடூர கொலை : 5 பேர் கைது

accus

கோவை கீரநத்தம் பகுதியைச் சேர்ந்த கோகுல் என்ற வாலிபர், வழக்கு ஒன்றில் ஆஜராகி கையெழுத்து போடுவதற்காக கோவை ஜே.எம்.2 கோர்ட்டுக்கு நேற்று வந்தார். அவருடன் அவரது நண்பர் மனோஜூம் வந்ததிருந்தார்.

கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்தபோது, 5 பேர் கோகுலை சுற்றி வளைத்து அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டி கொன்றனர். தடுக்க வந்த கோகுலின் நண்பர் மனோஜையும் வெட்டினர். இதில் மனோஜ் பலத்த காயமடைந்தார்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

கோவை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலும் போலீசார் தீவிர வாகன தணிக்கை மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு, குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தனிப்படை போலீசார் இன்று தீவிர வாகன சோதனை நடத்தினர்.

கொலை நடந்த இடத்திற்கு வந்த நபர்களில் ஒருவரின் செல்போன் எண்ணின் சிக்னல் அங்கு கிடைத்ததைத் தொடர்ந்து வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில், ஜோஸ்வா தேவபிரியன், கௌதம், அருண்குமார், பரணி, ஹரி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை கோத்தகிரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.
 

Share this story