தமிழ்நாட்டில் தொழில் தொடங்க, 5 நிறுவனங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்..
 

eco0

தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி வருகிற 7-ந் தேதி 2-ம் ஆண்டை நிறைவு செய்து 3-ம் ஆண்டை தொடங்குகிறது.

இந்த சூழலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவையின் 12-வது கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியகூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் காட்டர்பில்லர், பெட்ரோனஷ் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தொழில் தொடங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி வருகை மற்றும் மதுரை, திருவாரூர் மாவட்டங்களில் நடைபெறவுள்ள விழாக்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share this story