14 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை

By 
central4

காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் செய்து வரும் நாச வேலைகளை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. அதன் பலனாக கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் பயங்கரவாதிகளால் நாசவேலைகள் செய்ய இயலவில்லை.

இந்நிலையில், காஷ்மீரில் சமீபத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தி 50 ராணுவ வீரர்களை படுகொலை செய்தனர். இதையடுத்து பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் பயங்கரவாதிகள் செல்போன் செயலிகள் மூலம் காஷ்மீரில் உள்ள தங்களது ஆதரவாளர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி இருப்பது தெரியவந்தது.

செல்போன் செயலி உதவியால்தான் நாசவேலைக்கு பயங்கரவாதிகள் திட்டமிடுவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய அரசு 14 செல்போன் செயலிகளுக்கு அதிரடி தடை விதித்துள்ளது. அந்த 14 செல்போன் செயலிகளும் முடக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி உள்ளதால் 14 செயலிகளும் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு சீனா அதிநவீன கருவிகள் கொடுப்பதுடன் ஆயுத உதவிகளும் செய்து வருகிறது. இதனால் சீனா செயலிகளும் முடக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் மூலம் 250-க்கும் மேற்பட்ட சீன செயலிகள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு 

Share this story