சென்னை வெள்ள பாதிப்பு: நிவாரண உதவி எவ்வளவு.? எப்போது வழங்கப்படும்.? 

By 
help1

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்தது. இந்த புயலுக்கு மிக்ஜம் என பெயரிடப்பட்ட நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை புரட்டி போட்டது.

மேலும் மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பாதிப்புகளுக்காக சுமார் 6000கோடி அளவிற்கு மத்திய அரசிடம் நிதி உதவி கோரியுள்ளது. அதில் முதல் கட்டமாக 5ஆயிரம் கோடி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகளவு உள்ள நிலையில், தமிழக அரசு சார்பாக நிவாரண உதவி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் ஒரு குடும்பத்திற்கு 5000 ருபாய் வழங்கப்பட்டது. எனவே தற்போதைய பாதிப்பால் அதை விட கூடுதலாக நிவாரண உதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பொங்கல் தொகுப்பு மற்றும் வெள்ள பாதிப்பு நிவாரணம் வழங்கப்படும் என தெரிகிறது. நிவாரண உதவி வழங்குவது தொடர்பாக கணக்கெடுப்பு பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதனையடுத்து விரைவில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தி இந்த கூட்டத்தில் நிவாரண உதவி தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

 

Share this story