சென்னை எல்.ஐ.சி. கட்டிடத்தில் தீ விபத்து : காரணம் என்ன?

 

lic

சென்னை அண்ணா சாலையில் எல்.ஐ.சி. கட்டிடம் உள்ளது. சென்னையின் அடையாளங்கள் இதுவும் ஒன்றாகும். இந்நிலையில் சென்னை எல்.ஐ.சி. கட்டிடத்தில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

எல்.ஐ.சி. கட்டிடத்தின் 14-வது மாடி மேல்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தீயணைப்பு படையினர் விரைந்து சென்று அரைமணி நேர போராட்டத்திற்கு பின் கட்டிடத்தில் பிடித்த தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. எல்.ஐ.சி. கட்டிடத்தின் மேல்தளத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே, இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

Share this story