முதலமைச்சர் ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் : இளையராஜாவின் வாழ்த்து வாசகங்கள்..
 

birth70

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது,

"தன்னுடைய 70-வது பிறந்தநாள் கொண்டாடும் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளோடு நிறை செல்வங்களோடு ஓங்கு புகழோடு வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்" இவ்வாறு வீடியோவில் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.

Share this story