முதலமைச்சரின் வாழ்க்கைப் பயண புகைப்பட கண்காட்சி : நடிகர் சத்யராஜ் தொடங்கி வைத்தார்..

sathyar

கோவை வ.உ.சி மைதானத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால சரித்திர வரலாற்று புகைப்பட கண்காட்சி தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை நடக்க உள்ளது. 

சத்யராஜ் எழுதிய கருத்து, இந்த கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்ட இதுவரை யாரும் பார்த்திராத பல அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. 

மேலும், அவர் 70 ஆண்டு கால பொது வாழ்க்கையில் சந்தித்த சவால்கள், மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்கள், எதிர்கொண்ட துயரங்கள் ஆகியவற்றை இன்றைய இளம் தலைமுறை தெரிந்து கொள்ளும் வகையில், பல்வேறு அரிய புகைப்படங்களும் இந்த கண்காட்சியில் இடம் பிடித்துள்ளன. 

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை பயண புகைப்பட கண்காட்சியை நடிகர் சத்யராஜ் தொடங்கி வைத்து, அங்குள்ள வருகைப் பதிவில் தனது கருத்தையும் பதிவு செய்தார்.

Share this story