அணு ஆயுதம் குவிக்கும் சீனா : அமெரிக்கா எச்சரிக்கை
 

China to accumulate nuclear weapons US warns

சீனாவின் ராணுவ பலம் மற்றும் அந்த நாட்டின் பாதுகாப்பு முன்னேற்றங்கள் குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டசன ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுகிறது. 

அவ்வகையில், இந்த ஆண்டுக்கான ஆய்வறிக்கையை பென்டகன் நேற்று வெளியிட்டது.

அதில்,  ஒரு வருடத்திற்கு முன்பு அமெரிக்க அதிகாரிகள் கணித்ததை விட சீனா தனது அணுசக்தியை மிக வேகமாக அதிகரித்து வருகிறது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

‘எதிர்பார்த்ததைவிட சீனா அதிவேகமாக அணு ஆயுதங்களைப் பெருக்கி வருகிறது. சீனா கடந்த ஆண்டு 200 அணு ஆயுதங்களை வைத்திருந்ததாக மதிப்பிடப்பட்டது. 

ஆனால், தொடர்ந்து அணு ஆயுதங்களை பெருக்கி வருவதால்,  அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 6 ஆண்டுகளுக்குள் 700 ஆக அதிகரிக்கலாம். 2030க்குள் 1,000 ஆக உயரலாம்’ என அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

தைவான் விஷயத்தில் சீனாவின் நோக்கங்கள் குறித்து தாங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தைவானை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் சீனாவின் நோக்கங்கள் பற்றிய புதிய எச்சரிக்கைகள் மற்றும் அணுசக்தி திறன் கொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணைகள் சோதனை என தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், அமெரிக்கா இந்த புதிய மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story