திருக்குறளை மேற்கோள் காட்டி, பிரதமர் மோடி 'யோகா தின உரை'
 

Citing Tirukurla, Prime Minister Modi 'Yoga Day Speech'


உலகம் முழுவதும் இன்று 7-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு யோகா தினத்தின் முக்கிய கருப்பொருள் 'ஆரோக்கியத்திற்கான யோகா' என்பதாகும். 

தலைநகர் :

தலைநகர் டெல்லியில் நடக்கும் சர்வதேச யோகா தின கொண்டாட்டம் காலை 6:30 மணி முதல் தூர்தர்ஷன் டிவி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சிறப்புரையாற்றினார். 

அப்போது, ‘நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி  வாய்ப்பச் செயல்’ என்ற திருக்குறளை மேற்கோள்  காட்டி பேசிய பிரதமர் மோடி, உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ விரும்புகிறேன் ' என்றார். 

ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கின்றேன். 

நம்பிக்கை ஒளி :

கொரோனா பெருந்தொற்று காலத்தில் யோகா நம்பிக்கை ஒளியாகத் திகழ்கிறது. யோகா செய்ய வேண்டும் என்ற உத்வேகம் மட்டும் இன்னும் குறையவில்லை ' என தெரிவித்தார்.

Share this story