பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் இடையே மோதல்.. ஒருவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு..

By 
pachi

சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தலைநகர் சென்னையில் மாநிலக் கல்லூரி - பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையேயான மோதல் தொடர் கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக உன்னுடைய கல்லூரி பெருசா? என்னுடைய  கல்லூரி பெருசா? ரூட் தல மோதல்கள் பேருந்து மற்றும் ரயில்களில் ஏற்படுகின்றன.  இது தொடர்பாக காவல்துறை பல்வேறு எச்சரிக்கை விடுத்தும் மாணவர்கள் இடையிலான மோதல் போக்கு தொடர் கதையாகவே இருந்து வருகிறது.

ஆனால், இந்த முறை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கிடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. பச்சையப்பன் கல்லூரியில் இரண்டு பிரிவுகளாக பிரிந்து ஒருவருக்கு ஒருவரை தாக்கி கொண்டனர். இந்த மோதலில் பீட்டர் என்ற மாணவனுக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு வீழ்ந்துள்ளது. இந்த தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

மேலும், அரிவாள் வெட்டால் காயமடைந்த மாணவர் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மோதல் சம்பவம் தொடர்பாக போலீசார் கல்லூரி மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Share this story