மேகதாது விவகாரம் : மத்திய அமைச்சருடன், எடியூரப்பா ஆலோசனை

Meghadau affair Eduyurappa consults with Union Minister

மேகதாது அணை விவகாரம் குறித்து, தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. 

கூட்டத்தில், கர்நாடக அரசின் மேகதாது திட்டத்திற்கு இதில் தொடர்புடைய மத்திய  அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக்கூடாது என்பது உள்பட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

100 சதவீதம் உறுதி :

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில், 'நாங்கள் மேகதாதுவில் அணை கட்டுவதில், 100 சதவீதம் உறுதியாக உள்ளோம். குடிநீர் முக்கிய தேவையாக இருப்பதால், அணை கட்ட கர்நாடகாவுக்கு  உரிமை உண்டு. 

அனைத்து அனுமதிகளையும் பெறுவதற்கு, நாங்கள் எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். கர்நாடகாவுக்கு இந்திய அரசு நீதி வழங்கும் என்று நான் நம்புகிறேன்' என்றார்.

ஆலோசனை :

இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, மத்திய நீர்வளத்துறை  அமைச்சரை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா சந்தித்தார். பெங்களூருவில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.

Share this story