சென்னையில் இன்று, பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஓபிஎஸ், ஈபிஎஸ் சந்திப்பு..

modistalin

* பிரதமர் மோடி இன்று பிற்பகல் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரெயில் நிலையம், பல்லாவரம் ராணுவ மைதானம் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில் சென்னை வரும் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார். சந்திப்பின்போது பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனு வழங்க உள்ளார்.

நீட் தேர்வு விலக்கு, நிலக்கரி விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனு அளிக்க உள்ளார். மேலும் ஆன்லைன் ரம்மி தடை மசோதா, ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் குறித்து பிரதமரிடம் பேசவும் முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* ரூ.2,467 கோடி புதிய விமான நிலைய முனையம் உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார்.  அவர் வருகையையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் சந்திக்க நேரம் கேட்டு இருந்தனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகிய இருவருக்குமே நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பிறகு, பிரதமர் மோடியை சந்திக்க அவர் சந்திக்க இருப்பது இதுவே முதல் முறையாகும். அதேவேளையில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வமும் பங்கேற்க இருப்பதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

Share this story