இயக்குனர் பாக்யராஜின் வீடியோ குறித்து கோவை மாவட்ட எஸ்.பி.விளக்கம்..

By 
met55

இயக்குநர் கே.பாக்யராஜ், ஒரு வீடியோ வைரலான நிலையில், வதந்தியை உருவாக்குவதும் பரப்புவதும் குற்றச் செயல்கள் ஆகும்''என காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்   தெரிவித்துள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குநர்  கே.பாக்யராஜ், ஒரு வீடியோவில், 'மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள அம்பரம்பாளையம் ஆற்றில் குளிக்க வருவோரை சிலர் ஆற்றில் மூழ்கடித்துக் கொல்வதாகவும், அவர்களின் உடல்களை மீட்க பணம் பெறுவதாகவும்' கூறியிருந்தார்.

இதுகுறித்து, தமிழ்நாடு ஃபேக்ட் செக் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், "நெஞ்சு பொறுக்குதில்லையே!" - இது இயக்குநர் கே.பாக்யராஜின் கதை... வதந்தி: இயக்குநர் திரு. கே.பாக்யராஜ், ஒரு வீடியோவில், 'மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள அம்பரம்பாளையம் ஆற்றில் குளிக்க வருவோரை சிலர் ஆற்றில் மூழ்கடித்துக் கொல்வதாகவும், அவர்களின் உடல்களை மீட்க பணம் பெறுவதாகவும்' கூறியுள்ளார்.

இதன் உண்மை என்ன என்பது குறித்து கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்  இ.கா.ப. கூறுவதாவது: 

"திரு.பாக்யராஜ் அவர்களின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றதாகும். அதுபோன்ற குற்றச் சம்பவம் ஒன்றுகூட மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவாகவில்லை. பத்ரகாளியம்மன் கோவில் அருகில் உள்ள ஆற்றுப் பகுதியில் 2022, 2023ல் எவ்வித உயிரிழப்பு சம்பவமும் நடக்கவே இல்லை”. • வதந்தியை உருவாக்குவதும் பரப்புவதும் குற்றச் செயல்கள் ஆகும்''என தெரிவித்துள்ளது.

Share this story