போலீஸ் மனைவியை பலாத்காரம் செய்ய முயற்சி - தர்மஅடி.. சிறை..

By 
szsz

பெரம்பலூர் மாவட்டம் திருவளக்குறிச்சியை சேர்ந்த பிரபாகரன்(31). கடந்த 2017-ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தார். தற்போது பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார்.

இவர் தண்ணீர் பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் தங்கி, தினமும் வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. 

இந்நிலையில் பிரபாகரன் கடந்த 12-ம் தேதி பணி முடிந்து இரவு மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மற்றொரு முதல்நிலை காவலர் ஒருவரின் மனைவி செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது அவரை பிரபாகரன் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால், அலறி கூச்சலிட்ட படியே அவரை கீழே தள்ளிவிட்டு தனது வீட்டிற்கு ஓடிச்சென்றுள்ளார். 

இதையடுத்து  நடந்த சம்பவத்தை தனது கணவரிடம் கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதையடுத்து பிரபாகரனை ஆயுதப்படையில் குடியிருக்கும் சக போலீசார் தர்ம அடி கொடுத்துள்ளார்கள். பின்னர் அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு  வருகிற 27-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். 


 

Share this story