கொரோனா 3-வது அலை : மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட விஞ்ஞானிகள் தகவல்

By 
Corona 3rd wave Scientists set up on behalf of the federal government

கொரோனா 3-வது அலை பாதிப்பின்போது, பெரும்பாலும் தினசரி பாதிப்பு அளவு 50,000 முதல் 1 லட்சம் என்ற அளவிலேயே இருக்க வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் பற்றி முன்கூட்டியே கணிப்பதற்காக, 3 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு ஒன்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.

இந்த குழு கொரோனா 3-வது அலை பாதிப்பு குறித்து, தற்போது கணித்துள்ளது. அதில், நோய் எதிர்ப்பு திறன் மற்றும் தடுப்பூசியின் செயல் திறன் இழப்பு, புதிய உருமாறிய கொரோனா வகைகள் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.  2-வது அலை தாக்க முன்கணிப்பின்போது, இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.

தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரப்படுத்தும்போது, கொரோனாவின் மூன்றாம் அல்லது நான்காம் அலையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. 3-வது அலை பாதிப்பின்போது, பெரும்பாலும் தினசரி பாதிப்பு அளவு 50,000 முதல் 1 லட்சம் என்ற அளவிலேயே இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3-வது அலை பாதிப்பு அக்டோபா்-நவம்பா் மாதங்களில் உச்சம் அடைய வாய்ப்புள்ளது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனில், மூன்றாம் அலையின்போது தினசரி பாதிப்பு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் அளவுக்கு உயர வாய்ப்புள்ளது.

இது 2-வது அலை உச்சத்தில் இருந்த மே மாதத்தின்போது பதிவான தினசரி பாதிப்பு அளவில் பாதிக்கும் குறைவாகும். 

மே 7-ந்தேதியன்று, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 4,14,188 ஆக பதிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story