ஜலதோஷ வைரசாக, கொரோனா மாறுகிறது : மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

Corona turns into cold virus medical expert warns

கொரோனா வைரஸ் தொடர்பாக, இன்னும் நாம் நிறைய புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது என்று இங்கிலாந்து தேசிய சுகாதார சேவையின் முன்னாள் தலைவர் சர் மால்கம் கிராண்ட் கூறினார்.

டெல்லியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில், இங்கிலாந்து தேசிய சுகாதார சேவையின் முன்னாள் தலைவர் சர் மால்கம் கிராண்ட் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :

கொரோனா வைரஸ் தொற்றானது, சாதாரண ஜலதோஷ வைரஸ் போல மாறிவிடும். ஆனால், அதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகும். 

கொரோனா வைரஸ் தொடர்பாக இன்னும் நாம் நிறைய புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. 

இன்னும் அது பெருந்தொற்றாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவில் இந்த வைரசால் வாரத்துக்கு 53 ஆயிரம் பேர் இறக்கிறார்கள். 

ஐரோப்பாவில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது' என்றார்.
*

Share this story