கொரோனா அதிகரிப்பு : அனைத்து பள்ளி-கல்லூரிகளையும் மூட, அரசு உத்தரவு

Corona increase Government order to close all school-colleges

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. 

இந்நிலையில், பஞ்சாப்பில் பாட்டியாலா அரசு மருத்துவக் கல்லூரியில் 100 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அப்பகுதி கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

100 மாணவர்களுக்கு கொரோனா :

கடந்த வாரம் பொறியியல் கல்லூரி ஒன்றில் 93 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இன்று அரசு மருத்துவக் கல்லூரியில் 100 மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து, அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் மூட பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.
 
அடுத்தகட்ட நடவடிக்கை :

இதுகுறித்து, அம்மாநில அமைச்சர் ராஜ்குமார் வெர்கா கூறுகையில், 'அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் சரண்ஜித் சிங் தலைமையில், அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. 

இதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்' என்றார்.
*

Share this story