கங்குலி குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று

Corona infection in 4 members of Ganguli family

சவுரவ் கங்குலி குடும்பத்தில், 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பி.சி.சி.ஐ. தலைவருமான சவுரவ் கங்குலிக்கு, கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  

டிஸ்சார்ஜ் :

இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த கங்குலி, கொரோனாவில் இருந்து மீண்டார். 

இருப்பினும், அவரை 2 வாரங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர். 

மனைவி-மகள் :

இந்நிலையில், சவுரவ் கங்குலி குடும்பத்தில் மகள் உள்பட 4 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 

கொரோனா உறுதி செய்யப்பட்ட 4 பேரும் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பெயரில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 

இதைத் தொடர்ந்து, கங்குலியின் மனைவி டோனாவிற்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கொரோனா இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
*

Share this story