சென்னையில் 11,229 தெருக்களில் கொரோனா : சுகாதாரத்துறை நடவடிக்கை

By 
Corona on 11,229 streets in Chennai Health action

சென்னையில் நேற்று ஒரேநாளில் 6,241 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 ஆயிரத்துக்கும் மேலானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதிக பாதிப்பு :

தேனாம்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. 

கோடம்பாக்கம் மண்டலத்தில் 68,947 பேரும், தேனாம்பேட்டையில் 68,024 பேரும், அண்ணாநகர் மண்டலத்தில் 73,424 பேரும், அடையாறில் 62,056 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள 39 ஆயிரத்து 537 தெருக்களில் 11 ஆயிரத்து 229 தெருக்களில் தொற்று பரவியுள்ளது. 

5 பேருக்கு மேல் பாதிக்கப்பட்ட தெருக்களாக 2,054 தெருக்கள் கண்டறியப்பட்டுள்ளது. 

4 பேருக்கு மேல் பாதிக்கப்பட்ட தெருக்களாக 2,808-ம், 3 பேருக்கு அதிகமாக பாதிக்கப்பட்ட தெருக்களாக 4,005-ம் உள்ளன.

3 பேருக்கும் குறைவான பாதிப்புள்ளதாக 7,224 தெருக்கள் கண்டறியப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. 

தடுப்பு நடவடிக்கை :

தற்போது 60 ஆயிரம் பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மாநகராட்சியின் தீவிர தடுப்பு நடவடிக்கையால் தினசரி பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

கடந்த 5 நாட்களாக தொற்று கட்டுக்குள் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
*

Share this story