கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், சாப்பிடக்கூடாத மாத்திரை? : ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்
 

Corona sufferers, inedible pill  ICMR instruction

கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைவாக உள்ளவர்கள், மால்னு பிராவிர் மாத்திரையை டாக்டர்கள் பரிந்துரையின்படி எடுத்துக் கொள்ளலாம் என இந்திய மருந்துகள் தர கட்டுப்பாடு இயக்குனரகம் தெரிவித்திருந்தது.

ஆனால், இந்த மாத்திரை பாதுகாப்பு சார்ந்த குறைபாடுகளைக் கொண்டு இருப்பதாக இந்திய ஆராய்ச்சி மருத்துவ கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) இயக்குனர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பும், இங்கிலாந்தும் இந்த மாத்திரையை கொரோனா சிகிச்சையில் சேர்த்துக் கொள்ளவில்லை. 

பலன் இல்லை :

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில், கொரோ னாவுக்கான தேசிய செயற்குழுக் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில், மால்னு பிராவிர் மாத்திரை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களுக்கு, இந்த மாத்திரை பெரிய அளவில் பலனை கொடுக்கவில்லை. இந்த மாத்திரையில் சில பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ளன.

எனவே, மால்னு பிராவிர் மாத்திரைகள் தேசிய சிகிச்சைக்கான விதிமுறையில் இணைக்க இக்குழு ஆதரவு தெரிவிக்கவில்லை' என்றார்.

தயாரிப்பு நிறுவனம் :

இந்த மாத்திரை முற்றிலும் பாதுகாப்பானது என அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொண்டால், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதன் அவசியமும், உயிரிழப்பும் பெருமளவில் குறைவது, 3-ம் கட்ட பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share this story