தனுஷ் நடிக்கும் படப்பிடிப்பு திடீர் நிறுத்தம் : கலெக்டர் அதிரடி உத்தரவு
 

miller

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் பகுதியில் நடைபெற்று வருகிறது. கேப்டன் மில்லர் இந்நிலையில், 'கேப்டன்' மில்லர் படப்பிடிப்பை நிறுத்த தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதாவது, மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக 'கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதில் இப்படத்தின் குண்டி வெடிக்கும் காட்சி இன்று படமாக்கப்பட்டுள்ளது. அப்போது குண்டு சத்தம் கேட்டதால் சுற்று வட்டார பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதையும் படியுங்கள்: பிரபல நடிகரின் 14 வயது கனவு. நிறைவேற்றிய பிரதமர் மோடி பின்னர் அங்கு சென்று பார்க்கும் போது தான் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது தெரியவந்துள்ளது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்பு தொடர்பாக படக்குழு மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்த தகவல் தெரிந்ததும் தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்தரன் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டார். அதன்படி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும், 15 நாட்கள் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

Share this story