கல்யாணம் ஆன 10 நாளிலேயே என் பொண்ண கொன்னுட்டாங்களே? கதறும் பெற்றோர்.. நடந்தது என்ன?

By 
m10

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி - லட்சுமிபுரத்தைச் சேர்ந்த மதி. இவரது மனைவி ராதா. இந்த தம்பதியின் 2வது மகள் சிநேகா(19). இவருக்கும் மேலூரை அடுத்துள்ள கோவில்பட்டியைச் சேர்ந்த மகேஷ் என்பவருக்கு கடந்த 22-ம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், பழ வியாபாரம் செய்து வரும் மகேஷ், தனது மனைவி சிநேகா மற்றும் மகேஷின் தாயுடன் அவர்களுக்கு சொந்தமான புதிய வீட்டில் வசித்து வந்தனர். 

இந்நிலையில், கணவரும், மாமியாரும் வெளியே சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த சிநேகா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த கணவர் கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த கணவர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்த போது மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியில் அலறி கூச்சலிட்டார். 

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் மூலம் சிநேகாவை மீட்டு மேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிநேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தனது மகள் சிநேகாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரின் தந்தை மதி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 10 நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share this story