மனைவிகளுக்கிடையே தகராறு : கணவர் மீது துப்பாக்கிச்சூடு

wife2

மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரை சேர்ந்தவர் தாகர்கான். இவருக்கு அஞ்சும், ஹூமாகான் என்ற 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி அஞ்சும் என்பவருடன் விவாகாரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தாகர்கானின் சொத்துகள் தொடர்பாக 2 மனைவிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று அஞ்சும் 3 பேருடன் சேர்ந்து தாகர்கானின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஹூமாகானுடன் அவர் சண்டை போட்டுள்ளார்.

சத்தம் கேட்டு தாகர்கான் வெளியே வந்தார். அப்போது அவர்களுக்கிடையே நடந்த தகராறில் தாகர்கான் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் காயம் அடைந்த அவரும், அவரது 2-வது மனைவியும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் இதுவரை துப்பாக்கி சூடு நடத்தியது யார் என்று உறுதி படுத்தப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

Share this story