சம்பவம் தெரியுமா? உயிரை பணையம் வைத்து, பயணிகளை காப்பாற்றிய கிரேட் டிரைவர்..

Do you know the incident Great driver who risked his life to save passengers ..

இமாசலப் பிரதேசத்தில், பயணிகளுடன் பள்ளத்தாக்கிற்குள் விழ இருந்த பஸ்சை, தனது உயிரை பணையம் வைத்து, பயணிகள் அனைவரும் வெளியேறும் வரை கட்டுப்படுத்தி வைத்திருந்த டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இது குறித்த சம்பவம் வருமாறு :

22 பயணிகள் :

இமாசலப் பிரதேச சிர்மிர் மாவட்டத்தின் ஷில்லாய் பகுதியில், 22 பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று  சென்று கொண்டிருந்த்து. 

தேசிய நெடுஞ்சாலை 707 இல் பொஹ்ராட் காட் அருகே பஸ் சென்றுகொண்டு இருந்தபோது, திடீர் என பஸ்சின் டயர்  வெடித்தது. 

இதனால், நிலை தடுமாறிய பஸ்  சாலையோர தடுப்புகளை உடைத்துக் கொண்டு பள்ளத்தாக்கிற்குள் விழ இருந்தது.

ஆனால், உடனடியாக சுதாகரித்துக் கொண்ட டிரைவர் பிரேக் போட்டதால், பேருந்து சாலைக்கும் பள்ளத்தாக்கிற்கும் இடையே தொங்கியது.

அத்துடன் பள்ளத்தாக்கிற்குள் விழ இருந்த பஸ்சை  டிரைவர், தனது கட்டுக்குள் கொண்டு வந்து, பயணிகள் 22 பேரும் வெளியேறும் வரை மிக முனைப்புடன் பிடித்து வைத்திருந்தார். 

டிரைவரின் நிலை :

பஸ்சில் இருந்து வெளியேறிய பயணிகள், பிறகு டிரைவரை பத்திரமாக மீட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this story