போதைப்பொருள் கடத்தல் கும்பல் தாக்குதல் : 4 இராணுவ வீரர்கள் பலி..

Drug trafficking gang attack 4 soldiers killed .

தென் அமெரிக்க நாடுகளில் கொலம்பியாவும் ஒன்று. அந்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. 

கொலம்பியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் இருந்து, உலகின் பிற பகுதிகளுக்கு பெருமளவு போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. 

தலைவன் கைது :

போதைப்பொருள் கடத்தலை தடுக்க, கொலம்பிய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இதனால், போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் அரங்கேறி வருகிறது.

இதற்கிடையில், அந்நாட்டின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஒடோனியல் என்பவரை ராணுவத்தினர் கடந்த மாதம் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட ஒடோனியல் போதைப்பொருள் கடத்தலுக்கென்றே கல்ஃப் கிலன் என்ற தனிப்படை ஒன்றையும் உருவாக்கியுள்ளான். 

இந்த போதைப்பொருள் கடத்தல் படையில், அதிநவீன ஆயுதங்களுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர். 

இராணுவம் குவிப்பு :

இந்நிலையில், அந்நாட்டின் அண்டிகுவா மாகாணம் இட்வாங்கோ பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்களை குறிவைத்து ஒடோனியலின் கல்ஃப் கிலன் போதைப்பொருள் கடத்தல் பிரிவினர் திடீர் தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில், கொலம்பிய ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
*

Share this story