ரஜினியை வீட்டில் சந்தித்த துரை வைகோ; காரணம் என்ன.?

By 
durai4

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, துரை வைகோ அவரது இல்லத்தில் சந்தித்தார்.

ரஜினிகாந்த் தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில், வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து, அமிதாப் பச்சன், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

அதேபோல் அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி  நடித்துள்ள படம் லால் சலாம். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து, கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

இப்படம் வரும்,  பிப்ரவரி 9 ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இவ்வாண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ளதை அடுத்து,  அரசியல் பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் ரஜினிகாந்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த  நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தகவல் வெளியாகிறது.
 

Share this story