உலகே கொண்டாடும் ஆங்கிலப் புத்தாண்டு, உருவான வரலாறு.!
 

English New Year is celebrated all over the world.

உலகெங்கும் ஒவ்வோர் ஆண்டும், ஜனவரி 1-ந் தேதி ஆங்கிலப் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. 

இதற்குப் பின்னால் சுவாரஸ்யம் நிறைந்த வரலாறே இருக்கிறது.

அதாவது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. 

இருப்பினும், முந்தைய காலங்களில் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்படவில்லை.

10 மாதங்கள் :
 
அந்தக் காலகட்டத்தில், ரோமானிய காலண்டரில் 10 மாதங்கள் மட்டுமே இருந்தன. 

மார்ஷியஸ் நினைவாகப் பெயர் சூட்டப்பட்ட மார்ச் மாதம் முதல் மாதமாக இருந்தது. அதனால், மார்ச் மாதம் தான் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, ரோமானிய மன்னரான போம்பிலியஸ் 2 மாதங்களை சேர்த்து மொத்தம் 12 மாதங்களாக்கினார். 

ஜனஸ் என்னும் ரோமானியக் கடவுளின் நினைவாக ஜனவரியஸ், பிப்ரவரியஸ் ஆகிய மாதங்கள் சேர்க்கப்பட்டன.

மன்னர் ஜுலியஸ் சீசர் :

புகழ்பெற்ற மன்னரான ஜூலியஸ் சீசர், ஜூலியன் காலண்டரை உருவாக்கினார். அதில் தான் ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அது உலகம் முழுவதும் பெரும்பாலானோர் பின்பற்றும் கிரிகோரியன் காலண்டருடன் ஒத்திருந்தது. கடவுள் ஜனஸைக் கவுரவிக்கும் விதமாக, ரோமானியர்கள் அம்மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாக கொண்டாட ஆரம்பித்தனர்.

போப் கிரிகோரி :

உலகில் கிரிகோரியன் காலண்டரை ஒத்திருந்து, பலரால் பின்பற்றினாலும், இதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்தன.

இந்நிலையில், இறுதியாக கி.பி. 1500-களில் போப் கிரிகோரி என்பவர், லீப் ஆண்டை உருவாக்கி புதிய காலண்டரை உருவாக்கினார். இதைத்தொடர்ந்து, முழுமை பெற்ற "கிரிகோரியன் காலண்டர்" நடைமுறைக்கு வந்தது. 

இதைத்தான், இன்றைய அறிவியல் உலகில் நாம் பின்பற்றி, ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடி வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.
*

Share this story