பட்டாசு ஆலையில் கோர வெடிவிபத்து; 8 பேர் சம்பவ இடத்திலேயே பலி..

By 
vvr

விருதுநகர் வெம்பக்கோட்டை அருகே செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அடுத்த ராமதேவன் பட்டியில் விஜய் என்பவருக்கு சொந்தமான வின்னர் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல் இன்று பணியாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ரமேஷ், கருப்பசாமி, அம்பிகா, முத்து, அபேராஜ், முருகஜோதி, சாந்தா உள்ளிட்ட 8 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share this story