முகநூல் நேரலை.. உரையாடிய உத்தவ் அணி தலைவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை...

By 
koko0

மும்பையின் தஹிசார் பகுதியில்  8ம் தேதி சிவசேனா (யுபிடி) தலைவர் ஒருவர் பேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீம் செய்து கொண்டிருந்தபோது 3 முறை கொடூரமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். பின்னர் அவர் அந்த துப்பாக்கிச் சூட்டினால் பரிதாபமாக உயிரிழந்தார் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிடைத்துள்ள முதற்கட்ட தகவல்களின்படி, சிவசேனா (யுபிடி) தலைவர் வினோத் கோசல்கரின் மகன் அபிஷேக் கோசல்கர், மொரிஸ் பாய் என்று அழைக்கப்படும் மொரிஸ் நோரோன்ஹாவுடன் பேஸ்புக்கில் லைவ்ஸ்ட்ரீம் செய்து கொண்டிருந்தார். பின் அந்த நிகழ்ச்சி முடிந்ததும் மொரிஸ் பாய் லைவ்ஸ்ட்ரீமை விட்டு வெளியேறியுள்ளார். 

அப்போது தான் கோசல்கரை மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதன் பிறகு, மொரிஸ் பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அபிஷேக் கோசல்கர் கருணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். 

தனிப்பட்ட விரோதம் காரணமாக அபிஷேக் கோசல்கர் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிரிவு தலைவர் முன்னாள் கார்ப்பரேட்டர் ஆவார். சமீபத்தில், பாஜக எம்எல்ஏ கண்பத் கெய்க்வாட், மகாராஷ்டிராவின் உல்ஹாஸ்நகரில் சிவசேனா தலைவர் மகேஷ் கெய்க்வாட்டை ஹில்லைன் காவல் நிலையத்தில் மூத்த காவலரின் அறைக்குள் சுட்டுக் கொன்றார்.

இரு அரசியல்வாதிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நீண்டகாலமாக நிலத்தகராறு தொடர்பாக முறைப்பாடு செய்ய ஒன்று கூடியிருந்தனர். இந்த சம்பவத்தில் சிவசேனா எம்எல்ஏ ராகுல் பாட்டீலும் காயமடைந்தார்.

Share this story